அரசு உயர் நிலைப்பள்ளி ஊனையூர் திருச்சி மாவட்டம்.
இன்றைய தினம் இப்பள்ளியில் கார்கில் போரின் 22ஆவது ஆண்டின் வெற்றி நாள் அனுசரிக்கப்பட்டது.
அதுசமயம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் சரவணன் உள்ளிட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .மேலும் கார்கில் போரில் வெற்றி பெற காரணமாக இருந்த ராணுவ வீரர்களுக்குப் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சை.சற்குணன் தலைமை தாங்கினார்.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும் முன்னாள் ராணுவ வீரருமான சுப்பிரமணியம் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தேசத்தை கட்டமைக்கும்
மாபெரும் பணியின் ஒரு அம்சமான கார்கில் வெற்றி நாளை கொண்டாடுவதில் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி அரசு அறிவித்த பெரும் தொற்று கால நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து நிகழ்த்தப்பட்டது.