திருச்சியில் அப்துல் கலாம் பசுமை இந்தியா டிரஸ்ட் சார்பில் அப்துல்கலாமின் 6ம் ஆண்டு நினைவு தின விழா .
ஏபிஜே அப்துல் கலாம் பசுமை இந்தியா டிரஸ்ட் சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தின விழா:
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு டாக்டர் கலாமின் 10 பொன்மொழிகள் 3நிடத்தில் ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட்டது,.
மாணவ மாணவியர் ஆர்வுமுடன் கலந்து கொண்டு சிறப்பாக டாக்டர் கலாமின் பொன்மொழிகளை அழகாக ஒப்புவித்தனர்,
டாக்டர் கலாமின் படத்தை வரைந்து காட்டி தங்களது திறமையை வெளிப்படுத்தினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, துணை தலைமை ஆசிரியர் புஷ்பலதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் பசுமை இந்தியா டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி முத்துச்செல்வி மற்றும் அட்மின் டிரஸ்டி லில்லி ஜெயராணி, பொருளாளர் ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.