திருச்சி புறநகர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
திமுகவின் பொய்யான வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குதல், பெட்ரோல் விலை ரூ.5ம், டீசல் விலை ரூ.4ம், சிலிண்டர் விலையில் ரூ. 100– மானியம் குறைப்பு, கட்டுமான பொருட்கள் விலை குறைப்பு மற்றும் அணில் ஓடுவதால் மின்வெட்டு ஏற்படுவதாக கூறுதல், மேகதாது அணை விவகாரத்தில மெத்தன போக்கு, விவசாய பெருங்குடி மக்களுக்கு விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள், தடையில்லா மின்சாரம் வழங்காமல்
மெத்தனபோக்காக செயல்பட்டு வரும் மக்கள் விரோத அரசை கண்டித்து மாநகராட்சி, நகராட்சி, பேருரலாட்சி, ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் நாளை காலை 10 மணியளவில் உறுப்பினர்கள் தங்கள் வீடுகளின் முன்னே கண்டன முழக்கங்கள் எழுதிய பதாதைகள் ஏந்தி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்குரலாய் கண்டன முழக்கம் எழுப்பிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
என திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தனது அறிக்கை கூறியுள்ளார்.