Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றுவாரா முதல்வர். முதுகலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

0

முதுகலையாசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர். முதுகலை ஆசிரியர்கள் எதிர் பார்ப்பு.

2O03-20004 -ல் தொகுப்பூதியத்தில் நியம்மிக்க பட்ட ஆசிரியர்களை 2006-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக பணியேற்றவுடன் தொகுப்பூதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியத்திற்கு மாற்றினார்.

இதனால் சுமார் 55000 முதுகலை ஆசிரியர்கள் பயனடைந்தனர். அணைத்து துறைகளிலும் அடுத்த பதவி உயர்வு என்பது அவர்கள் பணியேற்ற நாள் முதற்கொண்டு பதவி உயர்வு வழங்க பட்டு வருகின்றது.

ஆனால் 2003 -ல் பதிவியேற்ற முதுகலை ஆசிரியர்கள் விதிவிலக்காக அவர்கள் காலமுறை ஊதியம் பெற்ற அதாவது ” 06-2006 – முதல் கணக்கில் கொண்டு பதவி உயர்வு வழங்குவதாக கடந்த அதிமுக அரசு அறிவித்தது,

இதனால் பாதிக்கபட்ட முதுகலை ஆசிரியர்கள் நீதிமன்றங்களை அணுகினர. இதில் மதிப்பு மிகு மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஒரு வழக்கில் முதுகலை ஆசிரயர் களுக்கு சாதகமாகவும் மற்றொரு தீரப்பில் எதிராகவும் மாறுபட்ட தீரப்புகளை வழங்கியுள்ளது. இதேபோல் சென்னை உயர் நீதிமன்றம் முதுகலை ஆசிரயர் அழகேசன் என்பவர் தொடந்த வழக்கில் முதுகலை ஆசிரியர்கள் பணியேற்ற நாள் முதல் கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது .

குஞ்சுகிருஷ்ணன் என்பவர் இதே போல் தொடர்ந்த வழக்கில் பணியேற்ற நாள் முதல கணக்கில் கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால இதை எதிர்த்து கடந்த அதிமுக அரசும் சில தனிநபர்களும் மேல் முறையீடு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனால் ஏறக்குறைய 700 தலமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாமல் காலியாகி நிர்வாகம் தடுமாறி வருகின்றன.

கொரானா பெருந்தொற்று தமிழக முதல்வரின் சிறப்பு மிகு சீரிய முயற்சியால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என எதிர் பார்க்கும் இந்த சூழவில் காலியாக உள்ள மேல்நிலை தலைமையாசிரியர் பணியிடங்களை நிரபபுமாறு 2003_2004-ல் நியமனம் செய்யபட்ட ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கின்றர்.

Leave A Reply

Your email address will not be published.