திருச்சி எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி. காந்தி மார்க்கெட்- பால் பண்ணை பாலம் திறப்பு. அதிகாரிகளுக்கு நன்றி
நேற்று முன்தினம் திருச்சி காந்தி மார்க்கெட்டிலிருந்து பால்பண்ணை செல்லும் சாலையில் பாலம் பணி முடிந்தும் திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதி என்ற தலைப்பில் நமது திருச்சி எக்ஸ்பிரஸ் மின் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தற்காலிகமாக மணல் அடித்து பாலத்தை திறந்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நம்மை தொடர்பு கொண்டு தங்களின் செய்தி உதவியால் நன்மை ஏற்பட்டுள்ளது வாழ்த்துக்கள் என கூறினார்.
இந்த பாராட்டுக்கள் அனைத்தும் பணியை விரைந்து முடித்த அதிகாரிக்கே சேரும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
பணிகளை துரிதமாக முடித்த அதிகாரிகளுக்கு நன்றி. மேலும் உடனடியாக அந்த பகுதியில் தார் சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.