உள்ளாட்சித் தேர்தலில்
தேர்தல் பணிக்குழு அமைத்து சிறப்பாக செயல்பட வேண்டும்.
மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் .
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தில்லைநகர் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அவைத்தலைவர் பிரிண்ஸ் தங்கவேல் தலைமை தாங்கினார். இதில் வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
அப்போது நடைபெற இருக்கும் பேரூராட்சி, நகராட்சி , மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் தீவிரமாக பணியாற்றி பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற உறுதி ஏற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தவர் முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா அதன்பின்னர் ஆட்சி பொறுப்புக்கு வந்த எடப்பாடியார் சட்டப்போராட்டம் நடத்தி காவிரி நதிநீர் பிரச்சினை காவிரி மேலாண்மை வாரியமும் காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைப்பதற்கு போராடி வெற்றி கண்டார்.
2015 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்து காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தினார் ஆகவே ஜெயலலிதா அரசும் எடப்பாடி அரசு செயல்பட்டது போல சட்ட போராட்டங்களும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுத்து மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் தேர்தல் பணி குழுவை அமைத்து தேர்தல் பணியை சிறப்பாக ஆற்றிட வேண்டும்.
அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை தலைமை கழகம் அறிவிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக நடத்திட வேண்டும் மேற்கண்டவை உட்பட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், பாசறை செயலாளர் சோனா விவேக்,
ஒன்றிய செயலாளர்கள் கோப்பு நடராஜன், முத்துக்கருப்பன், அழகேசன்,செல்வராஜ் மற்றும் திருவரங்கம் எஸ்.வி.ஆர். ரவி சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்