திருச்சி ஆர் சி மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளான இன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்பணி சின்னப்பன் கலந்துகொண்டு காமராஜர் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி கல்வி வளர்ச்சி நாள் பற்றிய செய்தியை சமூக இடைவெளியை பின்பற்றிய முறையில் ஆசிரியரிடம் உரையாற்றினார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர் சங்க செயலாளர் டேவிட் ஆரோக்கிய ராஜ் மற்றும் பொருளாளர் சாலமோன் ராஜ் செய்திருந்தனர்.
இதில் பள்ளியின் ஆசிரியர்கள் அலுவலர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி குறித்த செய்தியினை பள்ளி செய்தி தொடர்பாளர் ஆசிரியர் லூயிஸ் தெரிவித்திருந்தார்