Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள திருச்சி விளையாட்டு வீரர்களுக்கு மாற்றம் அமைப்பினர் வாழ்த்து.

0

'- Advertisement -

Ad banner

*திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த சேகர்-உஷா தம்பதியரின் மகள் தனலெட்சுமி (வயது 22) சிறு வயதில் தந்தையை இழந்த தனலெட்சுமி தனது தாயின்* *அறவனைப்பில் பல தடைகளை கடந்து இச்சாதனைகளை புரிந்திருக்கிறார் தடகள வீராங்கனையான இவர் பல்வேறு மாநில தேசிய தடகள போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார் கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் பங்கேற்ற தனலெட்சுமி தங்கப்பதக்கத்தை வென்று தடகள விளையாட்டு* *வீராங்கனை P.T.உஷா அவர்களின் 23 ஆண்டு கால சாதனையையும் முறியடித்து சாதனை படைத்து திருச்சி திரும்பிய அவருக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் மாற்றம் அமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது* *இதனை தொடர்ந்து ஜப்பான் நாட்டின் தலைநகர்*

*டோக்கியோவில்* *வருகிற 23-ந் தேதி* *தொடங்கவுள்ள*

சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டிகள் கடந்த ஒரு மாதமாக பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது.

இதில் திருச்சியை சேர்ந்த தனலெட்சுமியும் பங்கேற்று இருந்தார். இதில் நேற்று முன்தினம் நடந்த 400 மீட்டர் தொடர் (ரிலே) ஓட்டத்தில் பங்கேற்று தனலெட்சுமி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் வருகிற 23-ந் தேதி டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட போட்டிக்கு அவர் தேர்வாகி உள்ளார். இதையடுத்து மாற்றம் அமைப்பின் நிர்வாகி ஆர்.ஏ.தாமஸ் மற்றும் நிர்வாகிகள் தனலெட்சுமிக்கும் அவரது தாயருக்கும் வாழ்த்துக்ககளை தெரிவித்தனர்.

இச்சாதனை புரிய சிறந்த முறையில் பயிற்சி அளித்த சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் பயிற்ச்சியளருமான மணிகன்ட ஆறுமுகத்திற்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் மேலும் தனலெட்சுமியின் குடும்ப நிலையை கருதி அவருக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசு பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றம் அமைப்பின் சார்பில் வேண்டுகோளையும் முன்வைத்தனர்.

மேலும் தனலெட்சுமியுடன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தடகள விளையாட்டு வீரர்கள் ரேவதிவீரமணி, ஆரோக்கிய ராஜிவ் , சுபா வெங்கடேசன், நாகநாதன் பாண்டி, உள்ளிட்டோர் வெற்றி பெற்று தமிழகத்திற்க்கும் இந்திய நாட்டிற்க்கும் பெருமை சேர்க்க அனைத்து மக்கள் சார்பிலும் மாற்றம் அமைப்பின் சார்பிலும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.