Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

0

தமிழகத்தின் 16-ஆவது சட்டசபை முதல் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது.

முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடக்கிவைத்தார்.

கவர்னர் தனது உரையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

செவ்வாய், மற்றும் புதன் இரண்டு நாட்களும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்-அமைச்சர் பதிலை அடுத்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.