துறையூர் தாலுகாவில் வட்டாட்சியரின் அலட்சியத்தால் கொரனோ நோய் அதிகரிக்கும் அபாயம்.
தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு அமலில் இருந்து வரும் நிலையில் குளிர்சாதன வசதி கொண்ட எந்த ஒரு நிறுவனத்திற்கும் திறந்து வியாபாரம் செய்ய அனுமதி தரவில்லை, ஆனால் துறையூர் பகுதியில் ஜவுளி கடைகள் அனைத்தும் குளிர்சாதன வசதியுடன் பின்புறமாக வியாபாரம் நடந்து கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே 12 இடங்களில் தடைப்பட்ட பகுதியா சுகாதார துறை அறிவித்துள்ளது துறையூர் பகுதியில் சிங்களாந்தபுரம் சேனப்பநல்லூர் பெருமாள்பாளையம் சேனப்பநல்லூர் கீரம்பூர் ஆகிய இடங்களில் ஒரே நாளில் கொரோனா மருத்துவ முகாம் நடைப்பெறுகிறது.
கண்டும் காணாமல் இருக்கும் துறையூர் வட்டாட்சியர் அவரிடம் சமூக ஆர்வலர்கள் பலமுறை எடுத்துக் கூறியும் கண்டும் காணாமல்

அவர் இருப்பதால் துறையூரில் நோய் அதிகரிக்கும், உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
இது இதைப்பற்றி செய்தியாளர்கள் வட்டாட்சியர் செல்வம் அவர்களிடம் விசாரித்த பொழுது அதற்கு சரியான பதில் கூறாமல் அவர் சிரித்து கொண்டே கவரிங் நகை கடை, சமூசா பியூட்டி பாலர் கடைக்கு சீல் வைத்தோம் தலா 1,000, 2.000 அபராதம் போட்டோம் என்று பதில் கூறுகிறார் .
சிறிய கடைகளை பார்த்து பார்த்து அபராதம் விதிக்கின்றனர்.
மேக்னா சில்க்ஸ், ரேணுகா சில்க்ஸ், மகாலட்சுமி சில்க்ஸ் போன்ற ஜவுளிக்கடைகளுக்கு இரண்டு முறை அழைத்து சொன்னோம் என்கிறார் வட்டாட்சியர் செல்வம்.
ஆனால் தினந்தோறும் கடைகள் திறந்து வியாபாரம் நடைபெறுகிறது. அபராதம் விதிக்காமல் இருந்து வருகிறார் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில் வட்டாட்சியர் செல்வம் செயல்பட்டு வருகிறார்.
மாவட்ட ஆட்சியர் உடனடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்ப்பு.