நாளை தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜய்.
இதையொட்டி விஜய் 65 படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த நிலையில், விஜயின் 65- வது படத்திற்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பர்ஸ்ட் லுக் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. நாளை விஜய் தனது 47-வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது ரசிகர்களுக்கு விருந்தாக பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் விஜயின் பீஸ்ட் படம் குறித்த அப்டேட்கள் தற்போது டிரெண்டிங்கில் உள்ளன.