இன்றைய ராசிப்பலன்- 19.06.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை நற்பலனை கொடுக்கும். வருமானம் பெருகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கடகம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் தொல்லைகள் நீங்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு நண்பர்களால் இனிய செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மன உளைச்சலை கொடுக்கும். உறவினர்கள் ஓரளவிற்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும்.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்