பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதத்தில் நடைபெறும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மழைக்கால கூட்டத்தொடர் வழக்கம் போல நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஓம் பிர்லா பேட்டி ஒன்றில் கூறுகையில்,
பாராளுமன்ற செயலக ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.445 உறுப்பினர்கள் தனியாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
மீதமுள்ள ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்வர்.
தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும், நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மழைக்கால கூட்டத்தொடர் குறித்து அமைச்சரை துணைக்குழுவே இறுதி முடிவு எடுக்கும்.
மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.