குப்பைகள் இல்லா பகுதிகளாக மெகா தூய்மைபணி
நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு.
நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்டம் வார்டு. எண்.57,58,59 மற்றும் 60 ல் உட்பட பகுதிகளில் சுகாதார பணிகளை மேம்படுத்துவது தொடர்பான நேரடி ஆய்வில்
குப்பைகள் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டு மேற்கண்ட வார்டுகளில் குப்பைகள் இல்லா பகுதிகளாக MASS WORK- கூட்டு பணி மேற்கொள்ள சுகாதார பணிகளை மேம்படுத்துவ குறித்து உதவிஆணையருக்கு உத்தரவிட்டார்கள்.

மேலும், ஆணையர் அறிவுறுத்தலுக்கிணங்க தினசரி வீடுகள் தோறும் வீடுதலின்றி குப்பைகளை பொதுமக்களிடம் இலகுரக வாகனத்தின் மூலம் வாங்கிட சுகாதார மேற்பார்வையாளருக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
இன்று உறையூர் பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 57 பகுதியில் இன்று முதல் பணி துவங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இலகுரக வாகனத்தின் மூலம் குப்பைகளை வாழங்கி மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தந்து நல்கிடுமாறும் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.