திருச்சி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் செந்தில்.
இவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவின் தீவிர விசுவாசி. அவர் பேரில் சின்னமா பேரவை தொடங்கி நடத்தி வருபவர்.
ஜெயலலிதா மற்றும் சசிகலா ஊழல் வழக்கில் விரைவில் விடுதலையாக திருச்சி மலைக்கோட்டைக்கு முட்டி போட்டு படிகட்டு ஏறியவர்.
சசிகலாவின் பிறந்தநாள் அன்று கோவில்களில் மண்சோறு சாப்பிடுவார், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவர்.
சசிகலா உடல்நிலை சரியில்லாதபோது அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.
இவ்வாறு தீவிர சின்னம்மாவின் விசுவாசியாக இருந்த ஒத்தக்கடை செந்தில் தொலைபேசிக்கு சற்று நேரம் முன்பு சசிகலா பேசியுள்ளார்.
அந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் சசிகலாவிடம் செந்தில் அழுதுகொண்டே நீங்கள் தலைமை ஏற்க உடனே வர வேண்டும் என கூறுகிறார். உங்களிடம் பேசும்போது எனது அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை மன்னித்துவிடுங்கள் எனவும் கூறுகிறார்.
இதனால் அதிமுகவை சேர்ந்த செந்தில் தம்பி சசிகலாவிடம் பேசியபோது பத்திரமாக இருங்கள் கொரோனா காலம் முடிந்தவுடன் விரைவில் தொண்டர்களை நேரில் சந்திப்பேன். அதனால்தான் அனைவரிடமும் பேசிக்கொண்டு இருக்கிறேன்.
முக கவசம் அணியுங்கள். குடும்பத்தார் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் கூறினார்.