சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ22 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
இரு கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களும் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகி இருக்கின்றன.
கேலக்ஸி ஏ22 5ஜி மாடலில் 6.6 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.
இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஏ22 மாடலில் 6.4 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
இரு மாடல்களும் கிரே, வைட், மின்ட் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 229 யூரோக்கள்,
இந்திய மதிப்பில் ரூ. 20,295 என துவங்குகிறது.
கேலக்ஸி ஏ22 விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.