திருச்சி இ. ஆர் மேல்நிலைப் பள்ளியில் திருச்சி சோழா ரோட்டரி சங்கம் சார்பில் உறவின் உயிர் காப்போம் என்ற தலைப்பில் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள
100 யூனிட் ஆக்சிஜன் செரி யூட்டிகள், 75 யூனிட் ப்ளோ மீட்டர், 175 யூனிட் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் கருவி மற்றும் முக கவசம்கள் உள்ளிட்டவைகளை
திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா அவர்களிடம் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வழங்கினார்.
பின்பு இ.ஆர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நற்று தண்ணீர் ஊற்றினார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
இதில் திருச்சி சோழா ரோட்டரி சங்க தலைவர் ஜோசப் பாக்கியராஜ், செயலாளர் அமலச்சந்திரன்/ திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ். இணை இயக்குனர் லட்சுமி, நோடல் ஆபீசர் முத்துக்குமார் மற்றும் சிறப்பு திட்டங்கள் இயக்குனர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.