Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2009ல் எனது நிதியில் கட்டிய கட்டிடங்களுக்கு இன்றைய எம்எல்ஏவின் பெயர். அதிமுக மா.செ. பரஞ்ஜோதி கண்டனம்

0

அதிமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:


மு.பரஞ்ஜோதி

அதிமுகமுன்னாள்அமைச்சர்

ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல பணிகளைச் செய்கிறார்கள். பல இடங்களில் கட்டிடங்கள் மற்றும் பேருந்து நிழற்குடைகள் கட்டப்படுகின்றன.

 

இந்த குறிப்பிட்ட கட்டிடங்கள் மற்றும் நிழல் குடையில் நிதி ஒதுக்கீடு தொகை,தேதி, போன்றவை கட்டிடத்தின் முகப்பில் எழுதப்படும்.

இந்த கட்டிடங்கள் இருக்கும் வரை நிதி ஒதுக்க சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர் இருக்கும் இதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்ட நடைமுறை ஆகும்.

ஆனால் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் 2006 முதல் 2011 வரை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம், மருதண்டகுறிசி, ஊராட்சி எகிரி மங்கலம், சாத்தனூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட நிழல்குடைகளில் இருந்த எனது பெயரை நீக்கிவிட்டு

தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தனது பெயரை எழுதியிருப்பது முற்றிலும் ஆளும் கட்சியின் அராஜக போக்கு ஆகும்.

புதியசட்டமன்றஉறுப்பினர்

இது போன்ற அராஜக சம்பவங்களின் மூலம் பொதுமக்கள் விரைவில் நான் எங்களை உணர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.