Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாலையில் சென்ற மாற்றுத்திறனாளிக்கு உதவிய அமைச்சர் கே என் நேரு. பொதுமக்கள் பாராட்டு

0

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுட்டெரிக்கும் வெயிலில் சாலையோரம் தவழ்ந்து சென்ற மாற்றுத்திறனாளியை பார்த்ததும் காரை நிறுத்தி இறங்கி அமைச்சர் கே.என்.நேரு உதவி செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அங்கிருந்து, உடையாபட்டியில் திமுக பிரமுகர் துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, உடையாபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது சுட்டெரிக்கும் வெயிலில் சாலையோரத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் தவழ்ந்து சென்று கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த அமைச்சர் கே.என்.நேரு உடனடியாக காரை நிறுத்தி அந்த நபரிடம் சென்று மாற்றுத்திறனாளிக்கான வண்டி இருக்கின்றதா என்று கேட்டார். இல்லை என்றவுடன் உடனடியாக மூன்று சக்கர வாகனம் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்

மேலும் அவருக்கு தேவையான உதவி என்ன தேவை என்பதை கேட்டறிந்ததோடு, தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறியதுடன் தான் காரில் வைத்திருந்த பிஸ்கட்டை எடுத்து வந்து கொடுத்து விட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


திடீரென அமைச்சர் ஒருவர் தன்னிடம் காரை விட்டு இறங்கி வந்து தன்னிடம் பேசி தேவையானவற்றை கேட்டறிந்தது மாற்றுத்திறனாளி வாலிபரான அதே பகுதியைச் சேர்ந்த சாலமன் என்பவரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

நெகிழ்ச்சிக்குள்ளான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ் அப்களில் அதிக அளவில் வலம் வந்து கொண்டுள்ள நிலையில், அமைச்சரின் செயலுக்கு பலரும் பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.