Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.3 லட்சம் அறிவித்த தமிழக முதல்வருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நன்றி

0

பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்:

குழந்தைகளின் எதிர்காலம், கல்வி மற்றும் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு மக்களை காக்கும் அரணாக தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றினால்  பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்காக நிரந்தர வைப்புத் தொகை திட்டம்.

கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு நிரந்தர வைப்புத் தொகை ரூபாய் ஐந்து லட்சம் .

கொரோனா நோய் தொற்றினால் ஏதேனும் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைக்கு உடனடியாக நிவாரணத் தொகை ரூபாய் 3 லட்சம்.

பட்டப்படிப்பு வரையிலான கல்வி  மற்றும் விடுதி உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்பு.

உறவினர் அல்லது பாதுகாவலரின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 3000 ஊக்கத்தொகை.

பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு அரசு விடுதி மற்றும் இல்லங்களில் முன்னுரிமை.

அனைத்து அரசு நலத் திட்டங்களிலும் முன்னுரிமை.

அக்குழந்தைகளின் கல்வி, வளர்ச்சி மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும், உதவித் தொகை அவற்றை கண்காதித்திட மாவட்டம்தோறும்  சிறப்பு குழுக்கள்.

என்று தொலைநோக்குப் பார்வையுடன் உத்தரவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழகத்தின் எதிர்காலம் ஆன அனைத்துக் குழந்தைகளின் சார்பாகவும் மக்கள் பிரதிநிதி என்ற முறையிலும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்ற முறையிலும் கோடான, கோடி நன்றியை  சமர்ப்பிக்கின்றேன்,

என திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.