Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

புதிய சிபிஐ அதிகாரியாக சுபாஷ் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

0

சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதுரி ஆகியோரிடையே இன்று நடைபெற்ற கூட்டத்தில் சிபிஐ இயக்குநரை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பட்டியலில் வி.எஸ்.கே.கவுமுதி, சுபோத் குமார் ஜெய்ஸ்வால், குமார் ராஜேஷ் சந்திரா ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சிபிஐ இயக்குநர் பதவி காலியாக இருக்கும் நிலையில், இவர்கள் மூவரில் யார் எந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்புகள்இறுகிறது.
இந்நிலையில், சுபோத் குமார் ஜெய்ஸ்வால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநராக நியமிக்கப்படுவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

சுபோத் குமார் ஜெய்ஸ்வால் இதற்கு முன் மகாராஷ்டிர காவல்துறை டிஜிபியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.