ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவின் மாநில அரசுகளுக்கு வினியோகிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பபுஷ்கின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பபுஷ்கின் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கோரியுள்ளதாக தெரிவித்தார். இந்த விண்ணப்பங்களை கவனமாக பரிசீலித்து அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், அது தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஃபைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தங்கள் தடுப்பு மருந்தை வினியோகிப்பது குறித்து மாநில அரசுகளுடன் பேசப்போவதில்லை என்றும் மத்திய அரசுடன் மட்டுமே பேச முடியும் என்றும் தெரிவித்திருந்தன