கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடி திரு.ராஜா அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல், ஆக்சிஜன் மாஸ்க்- சிலிண்டரை அரசுமருத்துவர் ஒருவரே எடுத்துத்சென்றதனால் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெறுவோர்க்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்திடவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் உயிர்களை காத்திட துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.