முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தலையீட்டால் உடனடி நடவடிக்கை.
முறையாக நடைபெறும் ஆர்.டி.பி.சி.ஆர் கிட் பரிசோதனை.
விராலிமலை அரசு மருத்துவமனையில் கடந்த 13 ஆம் தேதி ஆர்.டி.பி.சி.ஆர் கிட் இருப்பு இல்லாமல் பொதுமக்கள் அழகழிக்கப்படுவதக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன் எதிரொலியாக சுகாதாரத்துறையின் நடவடிக்கையின் பேரில் இன்றுமுதல் முறையாக பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
விராலிமலை அரசு மருத்துவமனையில் கடந்த 13ஆம் தேதி ஆர்.டி.பி.சி.ஆர் கிட் இருப்பு இல்லை என்று பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
விராலிமலை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யாவிட்டால் 45 கிலோ மீட்டர் செய்துதான் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பொது முடக்கத்தின் போது போக்குவரத்து வசதியின்றியும் அல்லல் படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், கடந்தாண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் சிறப்பாக கையாண்டதாகவும், பேசப்பட்டது
மக்களின் வேதனை குறித்து விஜயபாஸ்கர் அவர்கள், சுகாதார துறையிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து முன்னாள் சுகாதார துறை அமைச்சரும், எம்எல்ஏ – மான விஜயபாஸ்கர் தலையீட்டாலும் தற்போது தமிழக சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விராலிமலை அரசு மருத்துவமனையில் முறையாக ஆர்.டி.பி.சி.ஆர் கிட் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து விஜயபாஸ்கர் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.