திருச்சி மாநகர் பொதுமக்களுக்கு ஒர் நற்செய்தி !!
யாராவது சளி, காய்ச்சல், இருமல், அல்லது மூச்சு விடுதலில் சிரமம் என்று உணர்ந்து கொரோனா சிகிச்சை பெற விரும்பினால்,
உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையை அணுகி அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள கொரோனா ஒ.பி.யை அணுகி,
பாரதிதாசன் பல்கலைக்கழக வளாக (காஜாமலை)சித்தா புத்துணர்வு மையத்தில் அட்மிட்டாக விரும்புவதாகக் கூறி, அங்கு பதிவு செய்த சீட்டினை பெற்றுக் கொண்டு போய் காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாக சித்தா புத்துணர்வு மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெறலாம்.
ஐந்து நாள் நல்ல சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான உணவும் இலவசம் !! இதனை தங்களோடு மட்டுமின்றி தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறச் செய்யுங்கள் !!
அரசு மருத்துவமனை கொரோனா ஓ பி தொலைபேசி எண் : 0431 – 2418995.
காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாக சித்தா புத்துணர்வு மைய கட்டுப்பாட்டு அறை மொபைல் எண் : 99523 87108, 99526 11108