Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆய்வு

0

திருச்சி உய்யகொண்டான் கிளையான காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால்கள் கடந்த பல வருடங்களாக குப்பைகள் மற்றும் ஆகாய தாமரைகளால் நிரம்பி வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருந்தன.

இதன் காரணமாக மழைக்காலங்களில் உய்யக்கொண்டான் ஆற்றுப்பகுதியில்வரும் தண்ணீர் கழிவுநீர் கால்வாய் வழியாக வரகனேரி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து மக்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வந்த நிலையில்

இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இரட்டை வாய்க்காலில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்:

கடந்த அதிமுக அட்சியில் ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகளையும், அரசு பணியாளர்களையும் முறையாக பயன்படுத்திக்கொள்ள தெரியாமல் எந்தவித முன்னேற்றத்தையும் செய்யாமல் இருந்துள்ளனர் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும் திருச்சியில் இதுபோன்ற செயல்பாட்டில் இல்லாத கால்வாய்களை உடனடியாக தூர்வாரி அவற்றை மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் மழைக்காலங்களில் பாதிக்கப்படாத வகையில் அனைத்து கழிவு நீர் கால்வாய் களையும் முழுமையாக தூர்வாரி பாதாள சாக்கடை இணைப்புகளை முறையாக சரிபடுத்த 6 மாத காலத்திற்குள் இந்த பணிகள் நிறைவேற்றபடும்.

தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகளில் எங்களுடைய முழு கவனமும் அதில் செலுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் எந்தெந்த துறைகள் எல்லாம் சரி செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் சரி செய்ய ஆரம்பித்து இருக்கிறோம்.

தற்போது உய்யக்கொண்டான் கால்வாய் இரட்டை வாய்க்கால்கள் கிளை தூர்வாரப்பட்டு இன்னும் ஒரு வார காலத்திற்குள் அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்து அடுத்து வரக்கூடிய மழைக்காலங்களில் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும் என கூறினார்.

பேட்டியின்போது மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுக பகுதி செயலாளர்கள் மலைக்கோட்டை மதிவாணன்,மண்டி சேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.