பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சங்கர் கோஸ், ஆனந்தமோய் பர்மான், மற்றும் சிக்கா சட்டோபாத்யாய் ஆகியோர் மேற்கு வங்காளத்தின் மாநில அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
மாநிலத்தின் வடக்குப் பகுதியில் கொரோனா மரணங்கள் மிகுந்து வருவதாகவும், மாநில அரசாங்கம் கவனக்குறைவாக செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூட்டம் கூட அனுமதியில்லாத சப்தர் ஹஸ்மி சவுக் பகுதியில் கூடி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அவர்கள் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.