திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மாவட்ட வருவாய் அவர்கள் அலுவலர் த.பழனிகுமார் முன்னிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்து தெரிவித்ததாவது :
தமிழக முதலமைச்சர் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.
அதில் முதல் தவணையாக ரூ.2,000ம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் 10.05.2021 அன்று தொடங்கி வைத்தார்கள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1226 நியாயவிலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 8.07.165 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.161.43 கோடி மதிப்புள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று நிவாரண உதவி முதல் தவணையாக ரூ.2,000ம் வழங்கப்பட உள்ளது.
இதில் அரிசி பெறும் குடும்ப அட்டைகளான AAY, OAP, ANP மற்றும் காவலர் குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும்.
இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
திருவெறும்பூர் பஸ் ஸ்டான்ட் காவேரி நகர் நியாய விலைக்கடையிலும், காட்டூர்
பர்மாகாலனி நியாயவிலைக்கடையிலும், அரியமங்கலம் உக்கடை 2 நியாய
விலைக்கடையிலும், திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரகனேரி 1
நியாயவிலைக் கடையிலும், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி
நியாயவிலைக்கடையிலும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து புதுக்குடி சிக்ஜில்சால் கேஸஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தொழிற்சாலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையில் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தொடர்ந்து. திருவெறும்பூர் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு). பி.அப்துல்சமது (மணப்பாறை), அமராவதி கூட்டுறவு சங்கத்தலைவர் வானதி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு தர்மராஜ், மலைக்கோட்டை மதிவாணன், வட்டாட்சியர்கள் செல்வகணேஷ் (திருவெறும்பூர்). குகன் (திருச்சி கிழக்கு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.