Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி ஆய்வு. 5 மணி நேரத்தில் தீர்வு.

0

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி வியாழன் அன்று தனது தொகுதியில் ஆய்வு பணி மேற்கொண்டு இருக்கும் போது ,

மணிகண்டம் ஒன்றியம் இனாம் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையித்தில் பராமரிக்க படாமல் இருந்த கட்டிடத்தை கண்டு , அதை உடனடியாக சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி பணிகளை துரிதப்படுத்தினார் .

இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது . மேலும் ஆய்வுப் பணி மேற்கொண்ட 5 மணி நேரத்திலேயே முற்றிலுமாக சரி செய்யப்பட்டது .

மேலும் அக்கட்டிடம் நேற்று காலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழநியாண்டியின் இந்த நடவடிக்கையால் மணிகண்டம் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.