Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சார்பில் பொதுமக்களுக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

0

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் :

வழிபாட்டு தலங்கள் மூலம் பொதுமக்களுக்கு முககவசம் ,கபசுர குடிநீர் , உணவு பொட்டலங்கள் மற்றும் அரசு பொது மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும் ,

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக இன்று ஸ்ரீரெங்கா ரெங்கா கோபுர வாயிலில் முக கவசம் சுமார் 100 நபர்களுக்கும் ,கபசுர குடிநீர்ரும் சுமார் 200 நபர் களுக்கும் , வாழை இலையில் கட்டப்பட்ட உணவு பொட்டலங்கள் கோயில் வாயிலில் 440 நபர்களுக்கும் ,

ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு சுமார் 100 நபர்களுக்கு உணவு பொட்டலங்களும் திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் வழங்கப்பட்டது.

மேலும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு சுமார் 100 உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன.

மேலும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் சார்பு கோயில்களான உறையூர் அருள்மிகு ஸ்ரீநாச்சியார் கோயில் , திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் , அன்பில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் கள் மூலமாக தலா 50 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.