Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் வீரசக்தி நன்றி அறிவிப்பு.

0

“மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் D.வீரசக்தி அவர்களது நன்றி அறிக்கை”

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என நாட்டுக்காக சேவையாற்றிய தியாக தலைவர்களின் வழியை பின்பற்றி உயிர் மட்டுமல்ல_உடல் உறுப்புகளும் தமிழர்களுக்கு தான் என்பதை பறை சாற்றும் விதமாக எனது உடல் உறுப்புகளை தானம் செய்து தான் இந்த அரசியல் களத்தில் நான் அடியெடுத்து வைத்தேன் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். .

மேலும் எனக்கு அரசியல் களத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நல்வாய்ப்பு கொடுத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அவர்களுக்கும், பணநாயகம் மலிந்த இந்த காலகட்டத்தில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற கோவிட் காலத்தையும் பொருட்படுத்தாது வாக்கு சாவடிக்கு வந்த கண்ணியவான்களையும், எனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எஜமானர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.

மேலும் இந்த தேர்தலின் பொழுது நேர்மைக்காக உழைத்த மய்ய தோழர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும், பத்திரிக்கையாளர் பெருந்தகைகளுக்கும் சக போட்டியாளர்களுக்கு நன்றிகளையும் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் சகோதர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி…!

வணக்கம்…

உடல் தானம் செய்வோம்.

இப்படிக்கு
D.வீரசக்தி,
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்,
மாநில செயலாளர்,
தொழில் முனைவோர் அணி,
மக்கள் நீதி மய்யம் கட்சி.

Leave A Reply

Your email address will not be published.