Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மேற்கு வங்காளத்தில் இன்று இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது

0

'- Advertisement -

Ad banner

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் மேற்கு வங்காளமும் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது.

அந்த மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ந்தேதி நடந்த நிலையில், 8-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

TVK ad

மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன.

35 பெண்கள் உள்பட 283 வேட்பாளர்கள், இறுதிகட்ட தேர்தல் களத்தில் உள்ளனர். அவர்களின் வெற்றி, தோல்வியை 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் தீர்மானிக்கப்போகின்றனர்.

மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.