சர்வதேச விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள ஏழை வீரர்களுக்கு உதவிய திருச்சி கிழக்கு தொகுதி மநீம வேட்பாளர் வீரசக்தி
மக்கள் நீதி மய்ய கிழக்கு தொகுதி வேட்பாளர் வீர சக்தியின் மனிதநேயம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வலசப்பட்டி, தொட்டிப்பட்டி கிராமத்தை சார்ந்த தடகள மற்றும் கபாடி வீரர்கள் நேபாள நாட்டில் வரும் 27,28 தேதிகளில் நடைபெறும் சர்வதேச தடகள போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றும் தங்களது குடும்ப பொருளாதார சூழல் காரணமாக கலந்துகொள்ள முடியவில்லை என கடந்த 19.04.2021ந் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அரசு தங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுமாறு மனு ஒன்றை கொடுத்தனர்.
மேற்படி தகவல் தனது கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில செயலாளரும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளருமான D.வீரசக்தி உடனடியாக மேற்படி இளைஞர்களை நேரில் சந்தித்து ஊக்கபடுத்தியதுடன்,
மேற்படி இளைஞர்கள் நேபாள் நாட்டிற்கு செல்ல பயண செலவிற்காக முழு செலவையும் ஏற்றதுடன் கிராமபுற இளைஞர்களை உற்சாகபடுத்தினார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் சமிபத்தில் மாற்றுதிறனாளி கிரிக்கெட் அணியினர் வெளிநாடு சென்று விளையாட பணம் இல்லாமல் அவதிபட்ட பொழுது அந்த இளைஞர்களுக்கு உதவினார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் மக்கள் நீதி மய்ய தலைவர் உதவிய வீரர்கள் தற்பொழுது வெற்றி கோப்பையுடன் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி ஏற்படுத்தினர்.
அது போல் இந்த கிராமபுற இளைஞர்களும் வெற்றி பெறவேண்டும் என மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் D.வீரசக்தி வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.