திருச்சி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நீர் மோர் பந்தல்.
திருச்சி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அம்பேத்கரின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரிய மிளகுபாறையில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தமிழாதன், சிறுத்தை சதீஷ், ஜெயக்குமார், முல்லைவளவன், ஜெயராஜ்., ராம அருண், அலெக்ஸ், பசுபதி,மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ரீட்ஸ் ராஜா, திமுகவைச் சேர்ந்த பகுதி செயலாளர் மோகன்தாஸ், முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்தி, வட்ட செயலாளர் புஷ்பராஜ், தேமுதிக பகுதி செயலாளர் வெங்கடேஷ், திலீப், செல்வம், மோகன், அண்ணாதுரை Rtd Agri, மற்றும் விசிக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.