அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க
சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காத்திடும் பொருட்டு
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் மற்றும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரில்
இன்று காலை குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தலை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான வளர்மதி
முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன் ஆகியோர்
கலந்துகொண்டு தங்கள் திருக்கரங்களால் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர்,தர்பூசணி மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சுந்தரராஜன், திருவனைகவல் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி. பாக செயலாளர் வி.என்.ஆர்.செல்வம் மற்றும்
கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.