டெல்லி நேஷனல் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி சிலம்ப வீரர்களுக்கு ரயில்வே எஸ்பி செந்தில்குமார் பாராட்டு.
டெல்லியில் நடைபெற்ற 3-வது சீக்கிய நேஷனல் போட்டியில் பங்குபெற்று சிலம்பத்தில் பதக்கங்கள் வென்ற திருச்சி மணவர்களை திருச்சி இரயில்வே காவல் கண்காணிப்பாளர் முனைவர்.த.செந்தில்குமார் பாராட்டி பரிசளித்தார்.
டெல்லியில் ஏப்ரல் 06 முதல் 11 வரை காமன்வெல்த் ஸ்டேடியத்தில் பல்வேறு வகையான 3 வது நேஷ்னல் சீக்கிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் திருச்சியை சேர்ந்த ஆ.சூர்யா, மோ.பி.சுகித்தா, பா.கவியரசி, ரா.ச.தருண் வித்யாதரன், சு.மங்கல லட்சுமி, சு.ஸ்ரீஷ் ராம், மற்றும் ரா.ரக்ஷதிரா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் பங்கு பெற்றனர்.
இதில் ஆ.சூர்யா தனித்திறமை, சுருள் வீச்சு மற்றும் கம்பு சன்டையில் கலந்து கொண்டு 3 தங்க பதக்கங்களை வென்றார். மோ.பி.சுகித்தா தனித்திறமையில் 1 தங்கம், சுருள் வீச்சில் 1 தங்கம் மற்றும் கம்பு சன்டையில் 1 வெள்ளியும் வென்றார் ஏனைய மற்ற சிலம்ப வீரர்கள் அனைவரும் தனித்திறமையில் ஒரு தங்கம் மற்றும் கம்பு சன்டையில் ஒரு தங்கம் என ஆளுக்கு இரண்டு தங்க பதக்கங்களை வென்றனர்.
இரயில் மூலம் திருச்சி வந்த சிலம்ப வீரர்களை இரயில்வே காவல் கண்காணிப்பாளர் முனைவர். த.செந்தில்குமார் பாராட்டி அனைவருக்கும் புத்தகங்களை பரிசளித்தார்கள்.
மேலும் அவர் விளையாட்டு மற்றும் படிப்பின் முக்கியதுவங்களை மாணவர்கள் அனைவருக்கும் எடுத்துரைத்து பாராட்டினார்கள்.
மேலும் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்ற மோ.பி.சுகித்தாவையும் பாராட்டி பரிசளித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் உடன் இருந்தனர்.