*கொரோனா வார்டாக மாறும் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் விடுதி*
சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் நாளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர்கள் விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இங்கு 250 படுக்கையறை வசதிகள் தயார் செய்யப்படுகின்றன.