அமிர்தம் சமூக சேவை
அறக்கட்டளை சார்பில்
தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உச்சபட்சமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது .
வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைகின்றது. நீர்க்கடுப்பு,உடல் சோர்வு, மயக்கம் உள்ளிட்டவை ஏற்படுகின்றது. அதனால் ஒவ்வொருவரும் கோடை காலங்களிலும் நீரினை தாகம் எடுக்கும் போதெல்லாம் தேவையான அளவு பருக வேண்டும்.
கோடை காலத்தை முன்னிட்டு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை திருச்சி புத்தூர் பிஷப் குளத் தெருவில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் வைத்துள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட நீரினை பாரம்பரிய முறைப்படி மண்பானையில் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் வைத்துள்ளார்கள். பொதுமக்கள் பள்ளி சென்று வரும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது.
யோகா ஆசிரியர் விஜயகுமார்,வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா உள்ளிட்டோர் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் ஏற்பாட்டினை செய்து குடிநீரினை வழங்கி வருகிறார்கள்.