Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மக்கள் சக்தி நிறுவனர் பிறந்த நாள் தன்னம்பிக்கை நாளாக கொண்டாட்டம்.

0

மக்கள் சக்தி இயக்க நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பிறந்தநாள் ஏப்ரல் 8ஆம் தேதி “நம்மால் முடியும்” தன்னம்பிக்கை நாளாக கொண்டாடப்பட்டது

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் “நம்மால் முடியும்.” என்று முழங்கிய சிந்தனையாளர் , எழுத்தாளர் மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி பிறந்தநாளை முன்னிட்டு “நம்மால் முடியும்” என தன்னம்பிக்கை நாளாக 08.04.2021, மாலை 5.30 மணிக்கு,
பொன்மலை ரயில்வே மைதானத்தில் மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இதற்கு மாநில துணை பொதுச் செயலாளர் வெ.இரா.சந்திரசேகர், திருச்சி மாவட்ட பொருளாளர் ஆர்.வாசுதேவன், சாமி தற்காப்பு கலைக்கூடம் நிறுவனர் டி.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள்.

தன்னம்பிக்கை நாளை முன்னிட்டு காலையில் செந்தண்ணீர்புரம் பகுதியிலும் ,மாலை பொன்மலை ரயில்வே மைதானத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன .

பிறகு சென்ற மாதம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கும்,
சென்ற வாரம் நடந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் சுற்றிய சாதனையாளர்களுக்கும் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு விழா நடந்தது.

நிகழ்வில் கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப்ரோசிரியரும், தண்ணீர் அமைப்பு செயலாளருமான கி.சதீஸ்குமார் சாதனையாளர்களை பாராட்டி விருது வழங்கினார்.

நிகழ்வில் நம்மால் முடியும் என்ற தாரக மந்திரத்தை முழங்கிய டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பிறந்த நாள் முன்னிட்டு தன்னம்பிக்கை நாளாக கொண்டாடும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு எண்ணங்கள், நம்புங்கள், நம்பு தம்பி நம்மால் முடியும், போன்ற புத்தகங்களை பற்றி எடுத்து கூறி, நம்புங்கள் | நம்மால் முடியும் என உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள்.

விழாவில் ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்டு அமைப்பின் நிறுவனர் ஜெட்லி, கவிதா சுரேஷ், சந்திரசேகர், மே.க.கோட்டை ஈஸ்வரன், என்.தயானந்த், செந்தண்ணீர்புரம் சூரிய முர்த்தி, டி.சிவகாமி, டி.சகான ஸ்ரீ, பெ. ரஞ்சித், டி.தர்ஷனா, சீனிவாசன், ப்ரீத்திஷா, மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.