Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக ஆதரவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுகவினர் ஆட்சியரிடம் மனு.

0

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் சமயபுரம் இன்ஸ்பெக்டர் முத்து, கான்ஸ்டபிள் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.

தமிழக சட்டசபைத் தேர்தல் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் சட்டசபை தொகுதியில், அதிமுக சார்பில் மு.பரஞ்ஜோதி போட்டியிட்டார். திமுக சார்பில் கதிரவன் என்பவர் போட்டியிட்டார்.

ஓட்டுப்பதிவு நாளன்று இனாம் சமயபுரம், குமரன் பள்ளி ஓட்டுச்சாவடியில் அதிமுக ஏஜெண்டுகள் அழகுராஜ்,, அங்குராஜ், சிவா ஆகியோர் இருந்துள்ளனர்.

அப்போது, மதியம் ஒரு மணி அளவில் வாக்குச்சாவடிக்கு சம்பந்தமில்லாத தெய்வ சிகாமணி, அப்துல்லா, மருதுபாண்டியன், வேலுச்சாமி ஆகியோர், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத இருவரை அழைத்து வந்து ஓட்டு போட முயன்றனர். அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை கேட்ட போது, மருதுபாண்டியன், வேலுச்சாமி ஆகியோர் அதிமுக ஏஜென்டுகளை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து, சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆனால் ஆய்வாளர் முத்து, SP போலீஸ்காரர் சரவணன் ஆகியோர் அதிமுகவினரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்காமல், மேற்படி திமுகவினர் கள்ள ஓட்டுப்போட பாதுகாப்பாக இருந்தனர்.

அன்று மாலையே அதிமுகவினரின் வீடுகளுக்குச் சென்று ஜாதிப் பெயரைச் சொல்லியும், வழக்குப் பதிவு செய்து உள்ளே தள்ளி விடுவேன் என்றும் தரக்குறைவாக திட்டி மிரட்டியுள்ளனர். திமுகவில் சேர்ந்தால் நல்ல பதவி வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர்

எனவே, தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்தவர்களையே மிரட்டிய ஆய்வாளர் முத்து மற்றும் போலீஸ்காரர் சரவணன் இருவரும் தேர்தல் விதிமுறைக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

மண்ணச்சநல்லூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் சமயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராமகிருஷ்ணன் கல்லூரியில் உள்ளது. இவர்கள் இருவரும் இதே காவல் நிலையத்தில் தொடர்ந்து பணியாற்றினால் வாக்கு எண்ணிக்கை அன்று பெரும் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது,

எனவே இருவர் மீதும் பணியிடை நீக்கம் அல்லது பணி இடமாற்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ், அதிமுக ஒன்றிய செயலாளர் ஆதாளி, மாவட்ட துணை செயலாளர் சின்னையன், நகர செயலாளர் சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.