ஆளுங்கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர்கள் செய்யாததை செய்தார் மநீம திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்தி.
திருச்சி மேல சிந்தாமணியில் உள்ள விபூதி தெருவில் உள்ள குடிசைப் பகுதிகளில் இன்று விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் அறிந்த திருச்சி மக்கள் நீதி மய்ய கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதிய உணவு அளித்ததுடன், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியான அதிமுக,திமுக சார்பில் கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாலும் தீ விபத்தால் பாதிக்க பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறவோ, நலத்திட்டங்களை யாரும் உடனடியாக செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி மக்கள் நலனுக்காக பாடுபடும் ஒருவரை தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் பேசிக் கொண்டனர்.