Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கதிரவன் வீட்டு கேட்டை கூட தொட முடியாது. ம.நல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி பிரச்சாரம்

0

 

 

*மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் கவனத்திற்கு…!!*

தனது தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி கிராம பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வரும் திமுக வேட்பாளர் கதிரவனை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர், வழக்கறிஞர் மு.பரஞ்ஜோதி அவர்கள்.

பணத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் கதிரவன் மக்களை கவரும் வகையில் பல்வேறு பொய் வாக்குறுதிகளை பேசி வருகிறார். அதில் ஒன்று தான் ஃப்ரீயாக ட்ரீட்மெண்ட்.

சொந்தமாக மருத்துவ கல்லூரி நடத்தும் அனைத்து கல்வி நிறுவனங்களும் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது மருத்துவ கவுன்சில் விதிமுறை‌. குறைந்த அளவில் நோயாளிகள் இருந்தால் மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யும் நிலை ஏற்படும்.

இதன் காரணமாகவே கிராம பகுதிகளில் இதுபோன்ற நிறுவனங்கள் இலவச பேருந்து வசதி, இலவச உணவு, இலவச பெட் வசதி என அறிவித்து ஆட்களை அழைத்து வந்து மருத்துவம் பார்க்கின்றனர்.

இந்த உண்மை தன்மையை இதுவரை எந்த வேட்பாளரும் மக்களிடத்தில் புரிய வைக்கவில்லை. இதே டெக்னிக்கை கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பாரிவேந்தர் பச்சமுத்து தனது எஸ்.ஆர்.எம் கல்லூரியில் இலவச மருத்துவம் என கூறி வாக்குகளை பெற்றது தற்போது நினைவிற்கு வருகிறது.

மக்களே நன்றாக சிந்தித்து வாக்களிப்பீர். கதிரவன் வீட்டு கேட்டை கூட உங்களால் நெருங்க முடியாது. அதைவிட அந்த கல்லூரியில் லட்சக்கணக்கில் பணத்தை கட்டி படிக்கும் மாணவனால் கூட கதிரவனை சந்திக்க முடியாது. இது தான் உண்மை நிலை.

Leave A Reply

Your email address will not be published.