Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

0

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொன்மலை சந்தையில் பிரசுங்களை பரப்புரை

வாக்காளர் விழிப்புணர்வு பரப்புரை

மக்கள் சக்தி இயக்கம் சார்பாக மாநில முழுவதும் வாக்காளர்கள் 100% ஒட்டப்பளிப்பதை வலியுறுத்தி பரப்புரை நடந்தது.

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பாக சென்ற வாரம் அரசு மருத்துவமனையில் 45 பேருக்கு மேல் ரத்தத்தை தானமாக வழங்கி விழிப்புணர்வு நடந்தது.

 

அதனை தொடர்ந்து பொதுமக்கள் கூடும் இடங்கள், வீடுகளில் வாக்களிப்போம் , வாக்களிப்போம், தவறாது வாக்களிப்போம். விழிப்புணர்வு பிரசுங்களை முலம் பரப்புரை செய்யும் விதமாக 28.03. 2021 காலை 10.30 மணியளவில் பொன்மலை வார சந்தையில் மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் தலைமையில் நடந்தது.

வாக்காளர் விழிப்புணர்வு வாக்களிப்போம் சமூகக் கடமையாற்றுவோம் என்ற அடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வு பரப்புரை ஏற்படுத்தப்பட்டது.
எனது வாக்கு எனது உரிமை என் வாக்கு விற்பனைக்கு இல்லை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களுடன் பொது மக்களிடை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒட்டுப்போடுவது நமது ஜனநாயக உரிமை, 18 வயது நிரம்பிய அனைவரும் ஒட்டளிக்க வேண்டியது தலையான கடமை.

வாக்களிப்பது நம் அனைவரின் அடிப்படை ஜனநாயக கடமை மற்றும் உரிமை. என விழிப்புணர்வு பிரசுங்களை வழங்கினோம்.

இந்த நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில துணைச செயலாளர் வெ.இரா.சந்திரசேகர், மகளிர் அணி நிர்வாகி ந.தரணி, பண்பாளர்கள் மே.க.கோட்டை ஜெயகுமார், நீ.தயானந்த், தங்கராஜ் , இளங்கோ, பெ.ரஞ்சித், மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.