Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை

0

*விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !*

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

சென்னை, பெரம்பூர் , அகரம் பகுதியை சேர்ந்த 15 பேர் ஆந்திரா , கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்று வேனில் திரும்பி வந்த போது நெல்லூர் அருகே அதிகாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் விபத்துகுள்ளாகி சென்னையை சேர்ந்த 7 பேர் ஆந்திராவை சேர்ந்த வேன் ஓட்டுனரும் உயிரிழந்துள்ளார்கள் என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது .

மேலும் இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு கூடுதல் மருத்துவ சிகிச்சை அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திரா அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .

பரிதாபமாக உயிரிழந்துள்ள 8 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள் அதிகாலை நேரங்களில் ஓய்வு இல்லாமல் வாகனத்தை இயக்குவதை பெரும்பாலும் தவிர் கொள்வது நல்லது ஏனென்றால் வாகனத்தில் பயனிக்கும் பயணிகள் ஓட்டுனர்களை நம்பிதான் பயணம் செய்கிறார்கள் என்பதை ஓவ்வொரு ஓட்டுனர்களும் உணர வேண்டும். மேலும் இது போன்ற கோர சம்பவங்கள் நடை பெறாமல் தவிர்க்க வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாகவும் , பாதுகாப்பாகவும் வாகனத்தை இயக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

எனவே வாகன விபத்துகுள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ள சென்னை பெரம்பூர் அகரம் பகுதியை சேர்ந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் இழப்பிடு வழங்க வேண்டும் என தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறீயுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.