திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு.
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன்
இன்று கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 8வது வார்டில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.
8வது வார்டு நிர்வாகி பிளட்டோ குடும்பத்தினர் சார்பில் வெடி வெடித்து, மாலை அணிவித்து, ஆராத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் அமைச்சர் செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
அப்போது அவருடன் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன், திருச்சி மாவட்ட செயலாளர் முத்துகுமார், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, பகுதி செயலாளர் அன்பழகன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.