நெல்லை மாவட்டம் பாபநாசம் டானாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் போதகர்கள் கருத்தரங்கு நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்டர் சாமுவேல் ராஜ்குமார் தலைமையிலும்,
பாஸ்டர்கள் சாம் பால்ராஜ், டேனியல் ராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் திருச்சபை வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக திருச்சி ஐசிஎப் பேராயத்தின் தலைவர் பேராயர் பா.ஜான் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக பாஸ்டர் மனுவேல் நன்றி கூறினார்.
இக்கருத்தரங்கில் 12 பேர்களுக்கு போதகர்களாக பட்டம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போதகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.