திருச்சியில் அரசு, தனியார் பஸ் போட்டியால் போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி வந்த அரசு பேருந்துக்கும் தனியார் பேருந்துக்கும் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டியால்
இன்று இரவு 8.30 மணி அளவில் ஆர்.சி பள்ளி அருகில் தனியார் பேருந்தை முந்திய போது அரசு பேருந்து ஒட்டுனர் தனியார் பேருந்தை மறித்து நடுரோட்டில் பஸ்சை நிறுத்தினர்.
ஓட்டுநர்களுக்குள் இடையே நடைபெற்ற போட்டியால் இரண்டு பேருந்துகளில் இருந்த பயணிகளும், சாலையில் வந்த வாகன ஒட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதனால் தலைமை தபால் நிலையத்தில் இருந்து ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதே போன்ற சம்பவங்கள் திருச்சி மாநகரில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதற்கு யார் முடிவு கட்டுவார்கள் பொதுமக்கள் புலம்பியவாறு சென்றனர்.