திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் வீதி வீதியாக பிரச்சாரம்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 36 வார்டில் அதிமுக வேட்பாளர் ப.குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்பகுதிகளில் உள்ள அந்தோணியார் கோவில் தெரு, ஜீவா தெரு, காந்தி தெரு கொட்டப்பட்டு, மொராய்ஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்பகுதி மக்களிடையே அவர் பேசும்போது நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது செய்த சாதனைகளை விவரித்து கூறினார்.
பல இடங்களில் உயர் மின் கம்பங்கள், பேருந்து நிழல் குடைகள், சாலை வசதி, மாவடிகுளம் தூர் வாரியது போன்ற சாதனைகளை எடுத்துக் கூறினார்.
பிரச்சாரத்தின் போது வேட்பாளர் குமாருடன் பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன், தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் பாச.ராஜேந்திரன், நாகராஜ், ராஜ மணிகண்டன், மாணிக்க விநாயகம், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.