இளைஞர் நீதிக்குழு உறுப்பினர்களுக்கு விருது.
அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றிய இளைஞர் நீதிக்குழு உறுப்பினர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு திருச்சியில் அண்மையில் நடைபெற்றது.
அனைத்து மாவட்ட இளைஞர் நீதி குழு மற்றும் எட்கேர் நிறுவனம் சார்பில், மகளிர் தினத்தையொட்டி சிறார் பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டு வரும் இளைஞர் நீதிக் குழு மகளிர் உறுப்பினர்களின் சேவைகளைப் பாராட்டி, புதிய உலக நியதி விருதுகள் வழங்கப்பட்டன.
குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2}இன் நடுவர் டி. திரிவேணி நிகழ்வில் பங்கேற்று, 24 பேருக்குவிருதுகளை வழங்கினார்.
திருச்சி எட்கேர் நிறுவன கல்விப் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு உளவியல் ஆலோசகர் அம்ஜத் ஹசன் மற்றும் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
திருச்சி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலர் அனிதா வரவேற்றார். இளைஞர் நீதி குழும உறுப்பினர் நான்சி டயானா நன்றி கூறினார். காவல் உதவிக் கண்காணிப்பாளர் மனோகரன், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் அஜந்தா, மலர்விழி, சரவணலெட்சுமி உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.