குடும்ப தலைவிகளுக்கு ஊக்கத்தொகை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கட்டாயம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என திருவெறும்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தம் பிரசாரம்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எம். முருகானந்தம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எழில்நகர், வ.உ.சி.நகர், துவாக்குடி தெற்கு மலை, தேவராயநேரி, அசூர், பொய்கைகுடி, தேனீர்பட்டி, அரவக்குறிச்சிபட்டி ஆகிய பகுதிகளில் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதன்முதலில் அறிவித்தவர் கமல்ஹாசன் தான். அதைத்தான் தற்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் அதிகரித்து கூறி வருகின்றனர்.
கமல்ஹாசன் அறிவித்தபடி குடும்ப தலைவிகளுக்கு ஊக்கக் தொகையும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கட்டாயம் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
ஆகவே, வருகிற தேர்தலில் எனக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அவருடன் கட்சியின் ஒன்றிய செயலாளர் சூரியூர் சக்தி, மாவட்ட துணை செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெபராஜ், நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் ஜானி பாஷா, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் ஜான்சன் ராஜ்குமார், தொழில் முனைவோர் அணி மாநில செயலாளர் அய்யனார், நகர செயலாளர் திருமலை பி.ஆனந்தன் மற்றும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள், இந்திய ஜனநாயக கட்சியினர், சமத்துவ மக்கள் கட்சியினர், தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சியினர் பலர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
சென்ற இடங்களில் எல்லாம் வேட்பாளருக்கு அந்தந்த பகுதி பொதுமக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.